சபரிமலை வழக்கு; அவசர வழக்காக விசாரணை செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு

0
541
No urgent hearing sabarimala case says supreme

சபரிமலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரணை உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. (No urgent hearing sabarimala case says supreme)

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 28 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், தீர்ப்பை எதிர்த்து அந்த மாநிலத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்யமாட்டோம் என்றும், தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதேபோன்று சபரிமலை அய்யப்பன் கோவிலை நிர்வகித்துவரும் திருவிதாங்கூர் தேவஸ்தான சங்கமும் மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்வது இல்லை என்று தீர்மானித்துள்ளது.

இந்த நிலையில், சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபட அனுமதி வழங்கி பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தேசிய அய்யப்ப பக்தர்கள் சார்பில் அந்த அமைப்பின் தலைவர் ஷைலஜா விஜயன் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உலகெங்கும் உள்ள பல இலட்சக்கணக்கான அய்யப்ப பக்தர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றம் மனுத் தாக்கல் செய்தவர்கள் அய்யப்ப பக்தர்கள் அல்ல. எனவே, அந்த மனுவின் மீது உச்ச நீதிமன்றம் எந்த விசாரணையும் மேற்கொள்ள சட்டரீதியான முகாந்திரம் எதுவும் இல்லை.

நீதிமன்றத்தின் தீர்ப்பு, அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டுள்ள மறு ஆய்வு மனுதாரர்களின் சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, வழிபாடு ஆகிய அடிப்படை உரிமைகளை மீறுவதாக அமைந்து இருக்கின்றது.

சபரிமலை கோவிலில் பல ஆயிரம் ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய நம்பிக்கையை சிதைக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்து உள்ளது. மக்களின் மத உணர்வை கோர்ட்டு மதிக்க வேண்டும்.

மேலும் மத நம்பிக்கை விவகாரங்களில் அரசியல் சாசனத்தில் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மத நம்பிக்கை மற்றும் பாரம்பரியத்தில் கோர்ட்டு தலையிடக்கூடாது.

சபரிமலை கோவில் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் நடத்தப்பட்ட விசாரணை பொதுநல வழக்கு என்ற நடைமுறைக்கு முற்றிலும் எதிராக அமைந்து உள்ளது.

இந்த வழக்கு மீதான விசாரணையின் போது அய்யப்ப பக்தர்களின் தரப்பு விசாரிக்கப்படவில்லை. எனவே, இப்போதாவது அய்யப்ப பக்தர்கள் தரப்பு வாதங்களை நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எதிராக தீர்ப்பு வந்தபோது மக்களின் பெருவாரியான போராட்டத்தை கருத்தில் கொண்டு அவர்களின் உணர்வுகளை மதித்து அனுமதி வழங்கியது போல, அய்யப்ப பக்தர்களின் மத உணர்வு மற்றும் பாரம்பரிய நடைமுறைகளை கருத்தில் கொண்டு சபரிமலைக்கு அனைத்து பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று அந்த மறுஆய்வு மனுவில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; No urgent hearing sabarimala case says supreme