ஃபுளோரிடா நோக்கி நகரும் மைக்கல் சூறாவளி!

0
376
 Michael hurricane moving toward Florida

மைக்கல் என்ற சூறாவளி காரணமாக மேற்கு கியுபா மற்றும் கிழக்கு மெக்ஸிகோ பிராந்தியங்களில் கடும் மழை மற்றும் கடும் காற்றுடனான காலநிலை நிலவியது. Michael hurricane moving toward Florida

இந்த சூறாவளி தற்போது மெக்ஸிகோவின் தென்கிழக்கு வளைகுடா வழியாக ஃபுளோரிடா நோக்கி நகர்வதாக அமெரிக்க தேசிய சூறாவளி எச்சரிக்கை மையம் நேற்று (திங்கட்கிழமை) தெரிவித்தது.

மைக்கேல் புயல் 3-வது வகையை சேர்ந்தது என வானிலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் கரோலினா புயல் கியூபாவை தாக்கி விட்டு அமெரிக்காவுக்குள் புகுந்தது. வடக்கு கரோலினா மற்றும் தெற்கு கரோலினாவை துவம்சம் செய்தது.

புளோரிடாவில் உள்ள 26 கவுண்டி பகுதிகளுக்கும் அம்மாகாண அதிகாரி ரிக் ஸ்காட் அவசர நிலை அறிவித்துள்ளார். தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்துள்ளார்.

இது அபாயகரமான புயல் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்கும்படி வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களை வீடுகளில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

டல்லாகாசே நகரில் வெள்ளம் புகுந்து விடாமல் தடுக்க 2 தாழ்வான பகுதிகளில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள புளோரிடா பல்கலைக்கழகம் ஒருவாரம் மூடப்பட்டது.

tags :- Michael hurricane moving toward Florida

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்