தமிழக முதலமைச்சர் எடப்பாடி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பு

0
545
Tamilnadu cm palanisamy meet PM modi today delhi

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் நரேந்திர மோடியை இன்றைய தினம் டெல்லியில் சந்திக்கவுள்ளார். (Tamilnadu cm palanisamy meet PM modi today delhi)

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 30 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக அனுமதி கோரி அவரது அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் சந்திப்பதற்கு எடப்பாடி பழனிசாமிக்கு நேரம் ஒதுக்கப்பட்டதுடன், இந்த தகவல் கிடைத்த நிலையில், நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றுள்ளார்.

அவருடன் அமைச்சர் டி. ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

இரவு 8 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு சென்றடைந்த எடப்பாடி பழனிசாமியை தமிழ் நாடு இல்ல அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

இதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் அவர் ஆலோசனை நடத்திய அதேவேளை, இன்று காலை 11 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை அவருடைய இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, மதுரை தோப்பூரில் அமைக்கப்படவுள்ள எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மத்திய அமைச்சர் சபையின் ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுக்கவுள்ளார்.

மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைவாக விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதேபோன்று, தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கவுள்ளார்.

இதன்பின்னர், தமிழ் நாடு இல்லம் திரும்பும் அவர் பத்திரிகையாளர்களை சந்திக்கவுள்ளதுடன், இதன்போது, பிரதமரை சந்தித்தது குறித்து விளக்கம் அளிக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இந்த சந்திப்பு அரசு ரீதியிலானது என்றாலும், அதன் பின்னணியில் அரசியல் இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், பாரதிய ஜனதா கட்சி இப்போதே கூட்டணி கணக்கை ஆரம்பித்துள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க. – அ.தி. மு.க. கூட்டணி மலர்வது குறித்தும் இன்றைய சந்திப்பில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Tamilnadu cm palanisamy meet PM modi today delhi