கேரளாவில் கன மழைக்கு எச்சரிக்கை

0
549
Heavy rain likely kerala deep depression forms

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளாவில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. (Heavy rain likely kerala deep depression forms)

அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அரபிக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு பகுதியை நோக்கி நகரவுள்ளது.

இதனையடுத்து, 2 நாட்களில் புயலாக மாறக்கூடும் இதன் காரணமாக, கேரளத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்புள்ளது.

இலட்சதீவு மற்றும் தென்கிழக்கு அரபி கடல் பகுதியில் மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Heavy rain likely kerala deep depression forms