விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும், அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணி என்று மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். (Kamal Haasan welcome Vijay coming Politics)
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் இன்றைய தினம் ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்,
அதற்கான ஆதாரங்களை படித்துவிட்டு மக்களிடத்திலும் சென்று அவர்களிடம் கலந்துபேசியதனால் மக்கள் நீதிமய்யம் தங்கள் கருத்தை முன்வைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் நாங்கள் வேண்டுவது ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான் இது தொழில் துறை முன்னேற்றத்துக்கு எதிரானது அல்ல மக்களுக்கு உயிர்ச் சேதம் இல்லாமல், சுற்றுச்சூழலுக்கு சேதம் இல்லாமல் தொழிற்சாலைகள் வர வேண்டும்.
இப்போது விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கும் 8 இலட்சம் தொன் என்பதால் உலகத்தில் சட்டதிட்டங்களை மீறிய முதல் காப்பர் ஆலையாக இது இருக்கும்.
இந்த ஆலை தமிழகத்தில் இருந்து விடக்கூடாது என்பது தான் எனது வேண்டுகோள் முன்னேற்றத்தை என்றும் மக்கள் நீதி மய்யம் வரவேற்கின்றது.
ஆனால், அது மக்களுக்கான முன்னேற்றமாக இருக்க வேண்டும். தனி வியாபாரியின் முன்னேற்றமாக இருக்கக்கூடாது. அது தொடர்பான மனுவை அரசு செயலாளரிடம் மக்கள் நீதி மய்யக் கட்சி நிர்வாகிகள் கொடுக்கவுள்ளனர்.
பெற்ரோல் விலையை தினம் தினம் என நிறைய நாட்கள் ஏற்றிவிட்டு கொஞ்சமாக குறைத்திருப்பதற்கு பெயர் குறைப்பது அல்ல ஏறித்தான் இருக்கிறது என்பதுதான் அதற்கான அர்த்தம்.
பெற்ரோல் விலை குறைக்கப்பட வேண்டும். வாகனங்களை பயன்படுத்துவோர் மத்தியில் இது பதட்டத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இது மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விலை ஏற்றம்.
விஜய்க்கு ஆர்வம் இருந்தால் அரசியலுக்கு வரட்டும். அரசியலில் ஊழலை எதிர்ப்பது என்பது நல்ல பாணிதான்.
அவர் சொன்னது போல் ஊழலுக்கு எதிரானது என்பதை அவர் ஊர்ஜிதப்படுத்தி விட்டாரேயானால் கண்டிப்பாக என்னுடைய சகோதர மனப்பான்மையுடையவர் அவர். அவரை வரவேற்கிறோம்.
இப்போது 6000 கிராம சபைகளை தொட்டுக் கொண்டிருக்கிறோம். 12500 க்கும் மேல் கிராம சபைகள் உள்ளன. அதனை தொட்டுவிட்டால் அனைவருக்கும் தெரியக்கூடிய மாற்றங்களை நாம் பார்க்க முடியும்.
நாடாளுமன்றம், சட்டமன்றத்துக்கு இணையான பலம் கிராம சபைக்கு உண்டு என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு யாரிடம் ஒப்புதல் வாங்கினார்கள். மக்கள் இருக்கும் இடத்தில் மக்களுக்கு பாதிப்பு இருக்கும் போது அவர்களிடம் தான் பேச வேண்டும்.
எங்கேயோ ஒரு அலுவலகத்தில் பேப்பரை நகர்த்திவிட்டால் அது தமிழகத்துக்கான முன்னேற்றமாக இருக்காது.
எங்களுக்கு பூத் கமிட்டி இல்லை என்று பலர் விமர்சனம் செய்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் பதில் எங்களின் பூத் கமிட்டி இயங்கும் போது தெரியும்.
நாங்கள் ரொம்ப அழுத்தமாக, படிப்படியாக எப்படி செய்ய வேண்டுமோ அதை நியாயமாக செய்து கொண்டிருக்கிறோம்.
இதனை பணம் கொடுத்து செய்ய நாங்கள் முயலவில்லை. எல்லாவற்றையுமே உழைப்பால், வியர்வை செய்ய வேண்டும் என்று நினைக்கிறோம். அதற்கான வேலை அழுத்தமாக நடந்து கொண்டிருக்கிறது.
கன மழைக்கு முன்பு எடுத்தது போல இல்லாமல் தற்போது நல்ல படியான நடவடிக்கையை எடுக்க வாழ்த்துக்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்தும் முதலிடம்
- தமிழகத்தில் தொடர் மழை; 06 மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு விடுமுறை
- எடப்பாடி பழனிசாமி அரசை கவிழ்க்க டி.டி.வி. தினகரன் பேரம் பேசினார்
- சபரிமலை பாதுகாப்பு பணிக்கு 500 பெண் பொலிஸார் நியமனம்
- டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
- ரோஹிங்யா அகதிகளை நாடு கடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தடை
- வெள்ளப்பெருக்கை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்; எடப்பாடி
- ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கினால் பொருளாதார தடை; அமெரிக்கா இந்தியாவுக்கு எச்சரிக்கை
- அரசு ஊழியர்களின் போராட்டத்துக்கு தீர்வு காண வேண்டும் ; ஜி.கே.வாசன்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Kamal Haasan welcome Vijay coming Politics