கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் `பேட்ட’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். Superstar Rajinikanth becomes Chief Minister
இதன் பின்னர் ரஜினிகாந்த், தற்போது சர்கார் படத்தை உருவாக்கிவரும் முருதாஸ் படத்தில் நடிக்கவிருப்பதாகவும், அதனை சன்பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கிறது என்றும் கூறப்பட்டது. ஏற்கெனவே சன்பிக்சர்ஸ் ரஜினியின் `பேட்ட’, முருகதாஸின் `சர்கார்’ ஆகிய படங்களைத் தயாரித்துவருகிறது. ஆனால், முருகதாஸ் ரஜினிக்காக எழுதிய கதையில் ரஜினி முதலமைச்சராவது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதால், இதனைத் தயாரிக்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், ஒருவேளை சன் பிக்சர்ஸ் இதிலிருந்து விலகினால் படத்தை லைக்கா தயாரிக்கலாம் எனக் கூறப்படுகிறது. எற்கெனவே ரஜினியின் 2.0 பட தயாரிப்பு, `காலா’ படத்தில் பங்கு கொண்டிருந்தது என லைக்காவுக்கும் – ரஜினி படத்திற்கும் சில பிணைப்புகள் உள்ளதால், இது நடக்கலாம் எனதான் சொல்கிறது கோலிவுட் வட்டாரம். இது பற்றி சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் உண்மை என்ன என்று அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கலாம்.
Superstar Rajinikanth becomes Chief Minister, Superstar Rajinikanth, Rajinikanth becomes Chief Minister, Rajinikanth, Chief Minister, Tamil News, Tamil Cinema News, Latest Tamil Cinema News