அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு: 6 பொலிஸார் காயம், ஒருவர் பலி

0
395
Mystery person shooter America 6 policeman injured one killed

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்து, சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை திடீர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபடுவது அந்நாட்டில் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. Mystery person shooter America 6 policeman injured one killed

அந்த வகையில் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள புளோரன்ஸ் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றுக்கு வழக்கு விசாரணை தொடர்பாக பிடியாணை வழங்க பொலிஸார் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக வீட்டிற்குள் இருந்தவாறு மர்ம நபர் ஒருவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இதில் குண்டு துளைத்து 3 பொலிஸார் முதலில் தரையில் வீழ்ந்தனர். பின்னர் அந்த மர்ம நபர், குழந்தைகள் சிலரை பிணைக் கைதிகளாக வீட்டிற்குள் பிடித்து வைத்துக்கொணடார். குழந்தைகளை மீட்க முயற்சித்த பொலிஸாரை நோக்கி மீண்டும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டதில் மேலும், 4 பொலிஸார் படுகாயம் அடைந்தனர்.

சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த துப்பாக்கிச்சூட்டின் இறுதியில் மர்ம நபரை சுற்றி வளைத்து பொலிஸார் கைது செய்தனர். எனினும் அந்த நபரை பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை மற்றும் எதற்காக பொலிஸாரை நோக்கி அவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்? என்ற விவரங்களையும் பொலிஸார் தரப்பில் வெளியிடவில்லை.

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த 7 பொலிஸார் அதிகாரிகளில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 6 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tags :- Mystery person shooter America 6 policeman injured one killed

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் 

***************************************

எமது ஏனைய தளங்கள்