நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்று நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல என்று துணை முதலமைச்சர் பரமேஸ்வரா கூறியுள்ளார். (narendra modi prime minister not good country Parameshwara)
பெங்களூருவில் துணை முதலமைச்சர் பரமேஸ்வரா ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், நாடாளுமன்ற தேர்தல் அடுத்த 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், ராகுல் காந்தி பிரதமராவது உறுதி. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்து 4½ ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
இந்த 4½ ஆண்டுகளில் நாட்டில் எந்த வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. நாட்டின் பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லது அல்ல.
இந்த 4½ ஆண்டு பாரதிய ஜனதா ஆட்சியில் மக்கள் ஏராளமான பிரச்சினைகளை சந்தித்து விட்டனர். பெற்ரோல், டீசல் மற்றும் எரிபொருள் சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. விலை உயர்வை கட்டுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாதாரண மக்கள் பெரும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர்.
மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சு பதவி யார், யாருக்கு வழங்கப்படும் என்பதை ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.
சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்றாலே பிரச்சினைகள் வருவது சகஜம். ஆனால் பெரிய அளவில் எந்த பிரச்சினைகளும் இல்லை என்றும் பரமேஸ்வரா கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினம்; நரேந்திர மோடி மலர் தூவி மரியாதை
- பிரதமர் வாய்ப்பை உதறித் தள்ளினார் கருணாநிதி; ப.சிதம்பரம்
- சபரிமலை அனுமதி விவகாரம் பெண் சமூக ஆர்வலருக்கு கொலை எச்சரிக்கை
- திருச்சியில் தாயின் சலடம் மீது அகோரி நடத்திய விசித்திர பூஜை
- போதைப் பொருள் கும்பலை எதிர்த்த நபர் சுட்டுக்கொலை; வைரலாகும் காணொளி
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
- பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; narendra modi prime minister not good country Parameshwara