சபாநாயகர் தனபாலை நீக்க வேண்டும் எனக் கோரி சட்டப்பேரவை செயலாளருக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் கடிதம் எழுதியுள்ளார். (Karunas MLA letter assembly secretary ask Speaker)
கருணாஸ் விவகாரம் தமிழக அரசியலில் கடந்த சில தினங்களாக பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முதல்வரை அவதூறாக பேசியது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வந்துள்ள அவர் மீண்டும் முதல்வருக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.
அவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் தரப்பு முடிவு செய்துள்ளதுடன், இதுதொடர்பாக ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சட்டப்பேரவை செயலாளருக்கு எம்.எல்.ஏ. கருணாஸ் எழுதிய கடிதத்தில், பேரவையின் நடவடிக்கைகள் மற்றும் அரசியல் சட்டங்களை சபாநாயகர் தனபால் மீறுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
‘சபாநாயகரின் ஒருதலைப் பட்ச நடவடிக்கையால் உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருதலைப்பட்சமாக செயற்படுவதால் சபாநாயகர் தனபாலை பதவியில் இருந்து நீக்க வேண்டும். இதற்காக சட்டசபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- மோடி மீண்டும் பிரதமரானால் நாட்டுக்கு நல்லதல்ல
- கருணாஸ் உடல்நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி
- இராமேஸ்வர மீனவர்கள் காலவரையறையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில்
- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் பதவியேற்பு
- கொல்கத்தாவில் அரச வைத்தியசாலையில் தீ விபத்து; நோயாளிகள் வெளியேற்றம்
- விவசாயிகளுக்கும் அதிரடிப்படையினருக்கும் வாக்குவாதம்; டெல்லி எல்லையில் பதற்றம்
- ஹைட்ரோகார்பன் திட்டத்தால் வரலாறு காணாத கிளர்ச்சி வெடிக்கும்
- வடமாநில விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை
- பாஜக விவசாயிகளை கொடூரமாக தாக்குகின்றது; ராகுல் காந்தி கடும் விமர்சனம்
மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :
Tags; Karunas MLA letter assembly secretary ask Speaker