டெல்லியில் அண்ணன் மகளை 4 ஆண்டுகளாக பாலியல் வன்புணர்வு செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். Man raped_his brother’s daughter gossip
23 வயது பெண் ஒருவர் தனது சித்தப்பா தன்னை 4 ஆண்டுகளாக மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்ததாக டெல்லியின் நரேலா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக இளம்பெண்ணிடம் விசாரித்த போது, அவருக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், இதன் காரணமாக அப்பெண்ணின் தந்தை உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கூறியதுடன், அதனை நிவர்த்தி செய்து தருவதாகக் கூறி அவரை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இதே காரணத்தையே கடந்த 4 ஆண்டுகளாக அவரிடம் கூறி அப்பெண்ணை மிரட்டி மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அவருக்கு திருமணம் ஆன பிறகும் கூட இது தொடர்ந்து வந்ததால், அப்பெண் இவ்விஷயத்தை அவரின் மாமனாரிடம் கூறியுள்ளார். உடனே அவர், அந்த பெண்ணை அழைத்துக்கொண்டு காவல்நிலையத்திற்கு வந்து புகார் அளிக்க அழைத்து வந்துள்ளார்.
இதனால் குறித்த பெண்ணின் சித்தப்பா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது போன்ற பாலியல் வன்புணர்வுகள் டெல்லியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவது கவலையளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.