நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்திலிருந்து மீளாத இந்தோனேசியாவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் குறிப்பிடுகின்றன. Indonesia 5.9 magnitude earthquake
அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது..
சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனோசியாவின் சுலவெசி தீவில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினையடுத்து, 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதுமாத்திரமன்றி பலு மற்றும் டொங்கலா பகுதிகளில் சுனாமி பேரலைகளும் தாக்கின.
இந்த பேரழிவுகளினால் அங்கு 800இற்கும் அதிகமானோர் உயிரிழந்ததோடு, பல கோடி மதிப்பிலான சொத்துக்களும் சேதம் ஏற்பட்டுள்ளன. இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகின்ற நிலையில், மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
பாரிய அனர்த்தத்தை சந்தித்த சுலவெசி தீவிலிருந்து 1600 கிலோமீற்றர் தொலைவில் சும்பா தீவு அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
tags :- Indonesia 5.9 magnitude earthquake
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
***************************************
- அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கி சூடு: 2 பேர் காயம்
- மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மேலாடையின்றி பாடிய டென்னிஸ் வீராங்கனை
- ஓரினச் சேர்க்கையாளர்களினால் சீனாவில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
- இந்தோனேசியாவில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 1200 ஆக உயர்வு
- இந்தோனேசியா நிலநடுக்கம்: 384 பேர் பலி
- 6,000 பெண்களுடன் உறவு: உலகையே திரும்பி பார்க்க வைத்த பிரபல காதல் மன்னன் மரணம்
- ஈராக்கில் பிரபல மாடல் அழகி தாரா சுட்டுக்கொலை
எமது ஏனைய தளங்கள்