உடுமலையில் காரும் வானும் விபத்து; சம்பவ இடத்தில் 04 பேர் பலி

0
602
Udumalai near accident 4 death police inquiry

உடுமலை அருகே இடம்பெற்ற விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். (Udumalai near accident 4 death police inquiry)

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.கே. நகர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய மரக்கறி வியாபாரி கிருஷ்ணமூர்த்தி, இவரது 27 வயதுடைய மனைவி கலைவாணி, இவர்களது 06 வயது மகள் ஹர்சினி, இவர்கள் 3 பேரும் பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்லுக்கு குலதெய்வ கோவிலுக்கு இன்று காரில் புறப்பட்டனர்.

பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்த 30 வயதுடைய மனோஜ்குமார் என்பவர் காரை ஓட்டி சென்றார்.

மதியம் 12 மணியளவில் கார் மடத்துக்குளம் உடுமலை வீதியில் கிருஷ்ணாபுரம் என்ற பகுதியில் சென்ற போது மடத்துக்குளத்தில் இருந்து உடுமலை நோக்கி ஒரு வான் வந்தது.

காரும், வானும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி, அவரது மனைவி கலைவாணி, மகள் ஹர்சினி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

டிரைவர் மனோஜ்குமார் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடுமலை அரச வைத்தியசாலையில் கொண்டு சென்ற போது செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

குறித்த விபத்தை அடுத்து, மடத்துக்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற 4 பேரின் சடலங்களையும் மீட்டு உடுமலை அரச வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; Udumalai near accident 4 death police inquiry