2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், பாதுகாப்பு அமைச்சுக்கே அதிகளவு நிதி ஒதுக்கப்படவுள்ளதாக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. Budget 2019 Allocate funds Ministry Defense
2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட நிதி ஒதுக்கீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய, 2019ஆம் ஆண்டில் பாதுகாப்புக்காக 306.1 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
2018 ஆம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினங்களுக்காக, 290 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டில் இது மேலும் அதிகரிக்கவுள்ளது.
இலங்கை இராணுவம், விமானப்படை, கடற்படை, கடலோரக்காவல் படை மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றை உள்ளடக்கிய பாதுகாப்பு அமைச்சுக்கே இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது.
அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில், விவசாய அமைச்சுக்கான ஒதுக்கீடு மூன்று மடங்கு அதிகரிக்கவுள்ளது. இந்த ஆண்டில், 23 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு இது 63 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கப்படும்.
போக்குவரத்து, சிவில் விமான சேவை, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள், நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவம், பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரம், ஜனாதிபதி செயலகம் உள்ளிட்டவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகளும் அடுத்த ஆண்டில் அதிகரிக்கப்படவுள்ளது.
2019ஆம் ஆண்டுக்கான மொத்த அரசாங்க செலவினங்கள், 2,281.5 பில்லியன் ரூபாவாக (ரூ. 2,281,682,472,000) ஆக இருக்கும் என்றும், மதிப்பிடப்பட்டுள்ளது.
நிதியமைச்சினால் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம், அடுத்தமாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
எதிர்வரும் நவம்பர் 5ஆம் நாள், நாடாளுமன்றத்தில் 2019ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை நிதியமைச்சர் மங்கள சமரவீர சமர்ப்பிப்பார்.
tags :- Budget 2019 Allocate funds Ministry Defense
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
ரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலமைச்சர் பதவிக்கு புதிய வேட்பாளர் – சுமந்திரன்
அரச கடன் வழங்க மறுக்கும் அரச வங்கி அதிகாரிகளுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை – மங்கள
நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளவில்லை – ஜனாதிபதிக்கு சரத் பொன்சேகா பதிலடி
நாடு திரும்பினார் ஜனாதிபதி – இறுக்கமான அரசியல் நகர்வுகளை முன்னெடுப்பார்?
வடக்கில் இராணுவத்தை வெளியற கோருவது இன்னொரு போருக்கே! இராணுவத் தளபதி மகேஷ் சேனநாயக்க!