பச்சிளங்குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தா..!

0
586
grandfather thornbush baby india tamil news

விருதுநகர் அருகே திருமணமாகாத மகள் பெற்ற குழந்தையை முட்புதரில் வீசிய தாத்தாவை போலீசார் தேடுகின்றனர்.grandfather thornbush baby india tamil news

விருதுநகர் சூலக்கரையை சேர்ந்த மனோகரன் 46,- இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணத்துக்கு முன் கர்ப்பமானார். திருமணம் நடக்கவில்லை. கருவையும் கலைக்க முடியவில்லை.

அந்த பெண்ணுக்கு 5 நாட்களுக்கு முன்பு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

குழந்தையை பையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனையை விட்டு வெளியேறிய மனோகரன் விருதுநகர் வந்து சூலக்கரை புதுக்கண்மாய் அருகே குழந்தையை கொலை செய்ய முயன்றுள்ளார்.

அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதால் குழந்தையை முட்புதரில் வீசி விட்டு தப்பினார்.

குழந்தையை சூலக்கரை போலீசார் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பிய மனோகரனை தேடுகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :