திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ வைத்தியசாலையில் அனுமதி

0
457
dmk leader stalin admitted apollo hospital

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறுநீரக தொற்றுக் காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (dmk leader stalin admitted apollo hospital)

திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அண்மையில் தெரிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு தொண்டர்களை ஊக்குவித்தும், கட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டும் வருகிறார்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல் நிலை குறைவால் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ வைத்தியசாலையில் நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக, வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கையில், சிறுநீரகத் தொற்று காரணமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :

Tags; dmk leader stalin admitted apollo hospital