விஜய் சேதுபதி நடிக்கும் 25வது படத்தை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜி தரணீதரன் உருவாகியிருக்கிறார். இப்படம் இயக்குனர் பாலாஜியின் 3வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. Vijay Sethupathy 25 Seethakaathi
75 வயது நாடகக்கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப்படத்திற்கு சீதக்காதி என பெயரிட்டுள்ளனர். அவருக்கு ஜோடியாக, தேசிய விருது பெற்ற முன்னாள் நாயகி அர்ச்சனா நடிக்கிறார். இதில் விஜய் சேதுபதியின் பெயர் அய்யா.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை கோபி பிரசன்னா வடிவமைத்து கொடுத்திருக்கிறார். முதன்முதலாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நலன் குமாரசாமியிடம் பாலாஜி தரணீதரன் காட்டிய போது, ‘‘பிரமாதம்’’ என்று பாராட்டிய அவர், ‘‘யார் இந்த நடிகர்’’ என்று கேட்டிருக்கிறார்.
விஜய் சேதுபதியின் 75 வயது தோற்றத்துக்கு மேக்கப் போடுவதற்காக யாரும் சரியாக அமையாதலால், நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி, லாஸ் ஏஞ்சல்ஸில் இருக்கும் ஆஸ்கார் விருதுபெற்ற ஒப்பனைக்கலைஞர் கெவின் ஹெனியைத் தொடர்புகொண்டிருக்கிறார்கள். அவர் நேரில் வரச் சொல்லியிருக்கிறார். உடனே, தனது குழுவில் உள்ள திறமையான கலைஞர் அலெக்ஸ் நோபிளை படக்குழுவுடன் சென்னைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதி முகத்தில் முதியவர் தோற்றத்தை உருவாக்கும் மேக்கப் போடுவதற்கு நான்கு மணி நேரம் ஆகுமாம். அதைக் கலைப்பதற்கு ஒன்றரை மணிநேரம் பிடிக்குமாம்.
கலையையும் கலைஞர்களையும் சரியாகப் புரிந்துகொள்ளாவிட்டால் என்ன ஆகும் என்பதே படத்தின் கதை, சொல்கிறார் இயக்குனர்.
Vijay Sethupathy 25 Seethakaathi, Vijay Sethupathy 25, Vijay Sethupathy, Seethakaathi, Seethakaathi first look poster, Vijay Sethupathy 25 Latest cinema news, Tamil Cinema News, Latest Tamil Cinema News
Photo Credit – Google
தொடர்புடைய செய்திகள்
நடிகை நிலானி புகார்…! காதலன் தீக்குளிப்பு….!
ஜோதிகாவுக்கு யார் என்றாலும் பாட்டெழுதலாம்…..!!!
‘காதலை தேடி நித்யா நந்தா’ ஃபர்ஸ்ட் லுக்
சிவகார்த்திகேயனுக்கு ஆமா போட்ட இசைப்புயல்….!!
சந்தோஷத்தை உதடு முத்தம் வழியாக பகிர்ந்து கொண்ட சன்னி லியோன்
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். குடும்பம் பெரிதானதையடுத்து தற்போது இருக்கும் வீடு இடப்பற்றாக் குறையாக இருந்ததால் புதிய வீடு வாங்கியிருக்கிறார். விநாயகர் சதுர்த்தி அன்று புதிய வீட்டுக்கு கணவருடன் குடிபுகுந்தார் சன்னி. இதுபற்றி அவர் கூறும்போது,‘இந்த நாளில் என்ன சடங்கு, சம்பிரதாயம் செய்வது என்று எனக்கு தெரியவில்லை……
எமது ஏனைய தளங்கள்