Saamy 2 Review சாமி- 2 விமர்சனம் : கோட்டை விட்டான் இந்த ராமசாமி….

0
500
Saamy 2 review Tamil Cinema News

விக்ரம் நடிப்பில் , ஹரி இயக்கத்தில் இன்றைய தினம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது சாமி 2. Saamy 2 review Tamil Cinema News

’சாமி- 2’ படத்தில் கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், பாபி சிம்ஹா, சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் எப்படி இருக்கின்றது பார்ப்போமா?

முதல் பாகத்தில் வில்லன் பிச்சை பெருமாளை வேட்டையாடிய ஆறுச்சாமி (விக்ரம்) இந்தப் படத்தில் கொலை செய்யப்படுகின்றார். அதேபோல் அவரது மனைவி (முந்தைய படத்தில் த்ரிஷா , இப்படத்தில் ஐவர்யா ராஜேஷ்)

இவர்களை கொலை செய்வது பிச்சை பெருமாளின் மகன் ராவண பிச்சை( பொபி சிம்ஹா). தனது தந்தை கொல்லப்பட்டதை அறிந்து இலங்கையிலிருந்து இந்தியா வரும் அவர் தனது தந்தையின் கொலைக்குப் பின்னால் உள்ளவர்களை தேடித்தேடி அழிகின்றார்.

அழித்த பின்னர் அங்கேயே கறுப்புப் பணத்தை வெள்ளையாக்கும் வியாபாரத்தை ஆரம்பிக்கின்றார் அவர்.

இதன்பின்னர் சுமார் 28 வருடங்களின் பின்னர் ஆறுச்சாமியின் மகன் ராமசாமி (விக்ரம்) இருவரும் சந்தித்துக் கொள்கின்றனர். தனது தந்தை, தாயை கொலை செய்தவர்களை சந்தித்தால் ஹீரோ என்ன செய்வார்? நீங்களே கதையை ஊகித்துக்கொள்ளுங்கள்.

முதல் பாகத்தில் இருந்த அழுத்தமான கதை, படத்தோடு இழையோடிய நகைச் சுவை, பதறவைக்கும் வில்லன், பலமான துணைக்கதாபாத்திரங்கள் ஆகியன இப்படத்தில் இல்லை.

டி.எஸ்.பின் இசை பெரிதாக எடுபடவில்லை. முதல் பாகத்தில் ஹாரிஸ் ஜெயராஜின் பங்களிப்பு இதில் ரொம்ப மிஸ்ஸிங்.
,
ஹரி படமென்றாலே லாஜிக்? அப்படியென்றால் என்ன என கேட்பது இப்படத்திலும் தொடர்கின்றது. சூரியின் நகைச்சுவை படத்தில் எடுபடவே இல்லை. மாறாக வெறுப்பையே வரவைக்கின்றது.

அழுத்தமான கதை இன்மை, கதையோடு ஒன்றவைக்க முடியாமல் போனமை படத்தின் பெரும் பலவீனங்கள்.

விக்ரம் வழக்கம்போல தனது முழு உழைப்பையும் வழங்கியுள்ளார். கீர்த்தி சுரேஷ் பற்றி கூற பெரிதாக எதுவும் இல்லை. பாபி சிம்ஹா தன்னால் முடிந்ததை செய்துள்ளார். ஹரி இந்தப்படத்தில் மொத்தமாக மிஸ் செய்துவிட்டார்.

வேகத்தை தவிர ஒரு ஊறுகாய் கூட இப்படத்தில் இல்லை.

மொத்தமாக முதல் பாகத்தில் தந்த இம்பாக்டை , இந்தப்படம் மொத்தமாக காலி செய்கின்றது. முதல் பாகத்தோடு மட்டும் நிறுத்தியிருந்தாலே அந்த நினைவுகள் எம்மோடு இருந்திருக்கும்…..

எனினும் ஒரு தடவை பார்க்கலாம்….

மொத்தத்தில் சாமி 2 , சாமி 1 இற்கு வந்த வேதனை கலந்த சோதனை……. Saamy 2 movie review, Saamy 2 box office. 

 

The Most Read

உலகம் பூராகவும் 1700 தியேட்டர்களில்: வெளியாக முன்னரே 72 கோடி – சாமி 2

எமது ஏனைய தளங்கள்

 

Tamil film, tamil cinema, tamil movies, tamil news, tamil songs, tamil movies online, tamilnew movies, tamil movies 2018, Sarkar Movie
tamil movie online, tamil video, latest tamil movies, new tamil movies online, watch tamilmovies online, latest tamil news, Tamil Movies HD Download, Upcoming Tamil Movies, Saamy 2 review Tamil Cinema News, Saamy 2 review Tamil Cinema