தெலுங்கானா மாநிலத்தில், சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரணாய் குமாரின் மனைவி அம்ருதா வர்ஷினி, சாதியத்திற்கு எதிராக ‘பிரணாய்க்கு நீதி’ என்ற சமூகவலைத்தள பிரச்சாரத்தை துவங்கியுள்ளார்.goal fight caste – dalit youth’s wife amruta
திருமண கோலத்தில் :
“சமூக அநீதிக்கு எதிராக, நான் மேற்கொண்டுள்ள முதல் நடவடிக்கை இது” என்று கூறியுள்ள அம்ருதா, “நாடு தழுவிய அளவில் சாதி ஆணவக் கொலைக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதே தனது லட்சியம்” என்றும் அறிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யாலகுடா பகுதியைச் சேர்ந்தவர் பிரணாய் குமார் (வயது 22). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் மாருதி ராவ் மகள் அம்ருதாவும் பள்ளியில் படித்த போதிலிருந்து, நண்பர்களாகப் பழகி பின்னர் காதலர்களாக மலர்ந்தனர். ஆனால், பிரணாய் குமார் தலித் என்பதால் இவர்களது காதலுக்கு அம்ருதாவின் தந்தை மாருதி ராவ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். பிரணாயின் பெற்றோரை மிரட்டினார். எனினும் மாருதி ராவின் எதிர்ப்பையும் மீறி காதலர்கள் இருவரும் கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத் சென்று திருமணம் செய்து கொண்டனர். தற்போது அம்ருதா 5 மாதக் கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில்தான், தலித் ஒருவரின் கரு என் மகளின் வயிற்றில் வளர்வதா? என்று ஆத்திரமடைந்த மாருதி ராவ், கடந்த வியாழக்கிழமையன்று கூலிப்படையை ஏவி, பட்டப்பகலில், அம்ருதாவின் கண் முன்பாகவே பிரணாய் குமாரைப் படுகொலை செய்தார்.
இச்சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. பல்வேறு தரப்பினரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். மாருதி ராவ் உள்ளிட்டவர்களைக் கைது செய்து, கடுமையாகத் தண்டிக்க வேண்டும் என்றும் குரலெழுப்பினர்.
இதனால், மாருதி ராவ் மற்றும் அவர் அமர்த்திய கூலிப்படையைச் சேர்ந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். மற்றொரு புறத்தில், சாதி ஆணவக் கொலையுண்ட பிரணாயின் உடல் ஞாயிற்றுக்கிழமையன்று கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. அப்போது மாணவர்களும் தன்னார்வ அமைப்புகளும் ‘ஜெய் பீம்’, ‘லால் சலாம்’ என்று முழக்கங்களையும் எழுப்பினர்.
இந்நிலையில்தான், ஆறாத் துயரத்திற்கு உள்ளாகி இருக்கும் அம்ருதா, கணவரை இழந்து விட்டதற்காக வீட்டில் முடங்கப் போவதில்லை என்றும், எந்த சாதியக் கொடுமை என் கணவரின் உயிரைப் பறித்ததோ, அதனை எதிர்த்துப் போராடப் போகிறேன் என்றும் அறிவித்துள்ளார்.
“பிரணாய் இல்லாமல் என்னால் வாழ முடியாதுதான்; ஆனால், என் குழந்தைக்காகவும், எந்த சாதி அநீதியால் என் காதல் கணவரை இழந்தேனோ, அந்த சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தை நடத்துவதற்கும் உயிர் வாழ வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன்” என்று அம்ருதா கூறியுள்ளார். கணவரை இழந்த சோகமும், கண்ணீரும் இன்னும் ஆறாத நிலையில், தனக்கு ஏற்பட்ட துயரம் இனிமேல் யாருக்கும் ஏற்படவிட மாட்டேன் என்ற கூறியுள்ள அம்ருதாவின் இந்த வைராக்கியம் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
திங்கட்கிழமையன்று மதியம் ‘பிரணாய்க்கு நீதி’ என்ற முகநூல் பிரச்சாரப் பக்கத்தை துவங்கிய அம்ருதா, அதில், ”கவலைப்படாதே பிரணாய்.. நீ தனியாக இல்லை.. என்னுடன் சேர்ந்து கோடிக்கணக்கான மக்களின் இதயத்தில் இருக்கிறாய்.. நீதிக்காக ஏராளமான மக்கள் போராடி வருகின்றனர்” என்ற பதிவு ஒன்றை வெளியிட்ட நிலையில், அதற்கு நாடு முழுவதும் பலரும் ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
அம்ருதா துவங்கிய முகநூல் பக்கத்திற்கு ஒரே நாளில் 64 ஆயிரம் பேர் விருப்பக் குறியிட்டு (லைக்), சாதி ஒழிப்புக்கான போராட்டத்திற்கு துணைநிற்போம் என்றும் கூறியுள்ளனர். தெலங்கானா மட்டுமல்லாது இந்தியா, உலகம் முழுவதும் உள்ள முகநூல் பயனாளிகள் இப்பக்கத்தைப் பின் தொடர்வதாக குறியிட்டுள்ளனர்.
குறிப்பாக, தெலுங்கானாவில் உள்ள ஏராளமானோர் பிரணாய்க்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தி வரும் புகைப்படங்களையும், ஆணவக் கொலைக்கு எதிரான பேரணி படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- கடல் தாண்டி பிரமாண்டமாய் அவதாரம் எடுக்கும் ‘ரஜினி மக்கள் மன்றம்’
- பெண் குழந்தை என கருதி 7 மாத கருவை கலைக்க முயன்றதால் கர்ப்பிணி உயிரிழப்பு
- இருளில் மூழ்கும் சென்னை – ஒருநாள் மின்வெட்டு அறிவிப்பு
- தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் வீட்டிற்கு தமிழிசை நேரில் சென்று இனிப்பு வழங்கி சமாதானம் (காணொளி)
- விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் – கனிமொழி பங்கேற்பு
- தலைமைச் செயலாளர் தாக்கப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாளுக்கு நீதிமன்றம் சம்மன்
- எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது – உயர்நீதிமன்றம்