இது காசு கொடுத்து சேர்த்த கூட்டம் – ஸ்டெர்லைட்டின் தில்லு முல்லு

0
557
coincidence crowd sterile rigging

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.coincidence crowd sterile rigging

சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூடக் கோரி நடந்த போராட்டத்தில் வெடித்த வன்முறை காரணமாக 13 பேர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்குப் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை இழுத்துப் பூட்டப்பட்டுள்ளது.

வேலை இழந்து விட்டதாக சுட்டிக்காட்டி, பலஅமைப்புகள் மூலம் மீண்டும் ஸ்டெர்லைட்டை திறக்கக் கோரி, அவ்வப்போது மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வருவது தொடர்ந்து வருகின்றது.

அந்தவகையில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் அங்கு பணிபுரிந்த 10 ஆயிரம் பேர் வேலை இழந்ததாகவும், விவசாய குடும்பங்களில் உள்ள பட்டதாரி மற்றும் ஐடிஐ படித்த இளைஞர்கள் வேலையின்றித் தவிப்பதாகவும், விவசாயப் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் புதர்களாகக் காட்சி அளிப்பதாகவும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நூதன முறையில் மனு அளிக்க வந்த விவசாயிகள் இவர்கள் தான்.

தங்களுக்கு எழுதிக் கொடுத்தவர்கள் சொன்னபடி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்கு தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் மனு கொடுக்க வந்தவர்கள் உள்ளே சென்று விட, வெளியில் அமர்ந்திருந்த குரும்பூரைச் சேர்ந்த இந்த ஏழைப் பெண் விவசாயிகளுக்கு எதற்காக வந்தோம் என்பதே தெரியவில்லை என்பது தான் வேடிக்கையின் உச்சம்.

கூட்டத்துக்கு கூப்பிட்டாங்க வந்தோம், எதற்கு என்று தெரியாது என்றார் ஒருவர்…

அதிலும் முதியவர் ஒருவர் தங்களுக்குக் கூலி கூட இன்னும் கொடுக்கலையப்பா..! என்று வேதனை தெரிவித்தார். அவரது பேச்சில் பணம் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பதற்றம் தெரிந்தது.

இன்னும் சிலர் எதற்காக வந்தோம் என்பதை சொல்ல மறுத்து அடம் பிடித்தனர்…

இந்தக் கூட்டத்தை அழைத்து வந்தவரின் பின்னணி குறித்து விசாரித்த போது, அவர் ஸ்டெர்லைட்டின் முன்னாள் ஒப்பந்ததாரர் தியாகராஜன் என்பதும், ஆலையை மூடியதால் வருமானம் இழந்த அவர் மூலமாக ஸ்டெர்லைட்டை மீண்டும் திறக்கக் கோரி விவசாயிகள் என்ற போர்வையில் கோரிக்கை மனு அளிக்கவந்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

ஆலையை மீண்டும் திறப்பதற்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வரும் தில்லுமுல்லு வேலைகளில் இதுவும் ஒன்று என்று தூத்துக்குடி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :