ரேஷன் வாங்க விரல் பதிவு அவசியம் – அக்.15 முதல் அமலாகிறது

0
726
finger registration purchase ration essential oct-15

நியாய விலைக்கடைகளில் முறைகேடுகள் நடப்பதைத் தவிர்க்க, பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே இனி பொருட்கள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.finger registration purchase ration essential oct-15

தமிழகம் முழுவதும் சாதாரண ரேஷன் கார்டுகள் மாற்றப்பட்டு கையடக்க ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒரு கோடியே 96 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

அவற்றின் அடிப்படையில் ரேஷன் கடைகளில் தற்போது, பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இருப்பினும், முறைகேடுகளை தடுக்கும் பொருட்டு, பயோமெட்ரிக் ரேஷன் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதன்படி ரேஷன் கார்டில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே பொருட்களை வாங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பயோமெட்ரிக் கைவிரல் ரேகை வைத்தால் மட்டுமே பொருட்கள் வழங்கப்படும்.

ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால் ஏற்கனவே அனைவரது கைவிரல் ரேகையும் அரசு வசம் உள்ளது.

அதனால் ஸ்மார்ட் கார்டில், பெயர் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவரது கைவிரல் ரேகை பதிந்தால் மட்டுமே பொருள் வினியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதார் அடிப்படையில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளதால் அனைவரது கைவிரல் ரேகையும் பயோமெட்ரிக் கருவி மூலம் சரிபார்க்கமுடியும். தவறான நபர்களுக்கு ரேஷன் பொருள் சென்றடைவது தடுக்கப்படும்.

இந்நிலையில் வரும் அக்டோபர் 15ம் தேதி முதல் தமிழகத்தில் நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை அமலாகிறது.

இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :