முல்லைத்தீவில் மீனவர்கள் மீண்டும் ஆர்ப்பாட்டம்

0
674
Fishermen protest Mullaitivu

முல்லைத்தீவில் சுருக்குவலை மீன்பிடித் தொழிலுக்கு தற்காலிக அனுமதி வழங்கப்படவுள்ளமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். (Fishermen protest Mullaitivu)

முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வளதிணைக்களத்திற்கு எதிரே இன்று காலை 09 மணியளவில் அமைதியான போராட்டத்தை மீனவர்கள் முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மீனவர்கள் கருப்புத் துணியினால் வாயினை கட்டி தமது எதிர்ப்பினை வெளியிட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரியை சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இந்த போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மீன்பிடி அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கான மகஜர்களை கையளித்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா குறித்த மீனவ பிரதிநிதிகளை நாளை நண்பகல் 12 மணிக்கு நாடாளுமன்ற கட்டிடத்தில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மீனவ அமைச்சர் ஆகியோரை சந்திக்க ஏற்பாடு செய்வதாகவும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை கொண்டுவந்து இந்தவிடயம் தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கு நிரந்தர தீர்வை பெற்று தருவதாகவும் உறுதியளித்தார்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன், மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.

இதன்போது மகஜரைப் பெற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மகஜரினை உரிய அமைச்சருக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Fishermen protest Mullaitivu