ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். (anti corruption force head cid allegations tid dig)
பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலகடி சில்வா தெரிவித்த கருத்து தொடர்பில் ஊடகங்களுக்கு வெளிப்படுத்திய குற்றச்சாட்டிலேயே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.
ஏற்கனவே ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமாரவிடம் குற்றப்புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், மீண்டும் இன்றைய தினம் முன்னிலையாகியுள்ளார்.
துல்ஹிரி பகுதியில் அமைந்துள்ள தனது வீட்டில் கடந்த வெள்ளிக்கிழமை வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் தன்னிடம் 6 மணி நேரம் விசாரணை மேற்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த 12 ஆம் திகதி பயங்கரவாத புலனாய்வு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலகடி சில்வாவுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலை வெளிப்படுத்திய பின்னர் இந்த சம்பவம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை வழங்குமாறு பிரதமர் பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.
குறித்த தொலைபேசி உரையாடலின் குரல் பதிவு உள்ள தொலைபேசியை இன்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊழல் எதிர்ப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார முன்னிலையாகியுள்ளார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இலங்கைக்கு ஏவுகணைப் போர்க்கப்பலை வழங்குகிறது சீனா
- மன்னார் அகழ்வுப் பணிகள்; தொடரும் மர்மம்
- எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு இந்தியா செல்வதற்கான விசா மறுப்பு
- கொள்ளுப்பிட்டியில் மசாஜ் தொழிலில் ஈடுபட்ட 14 பெண்கள் கைது
- ஆட்கடத்தல்களை தடுக்க அவுஸ்திரேலிய அரசாங்கம் பல நடவடிக்கைகள்
- ரவி கருணாநாயக்க மீது வழக்குத் தாக்கல்
- யாழ். பல்கலைக்கழகத்தில் கைக்குண்டு மீட்பு
- தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில்
- குளவிக் கொட்டுக்கு இலக்காகி 20 மாணவர்கள் வைத்தியசாலையில்
- இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் வீழ்ச்சி
- சுமந்திரனை விமர்சித்து முல்லைத்தீவில் துண்டுப்பிரசுரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; anti corruption force head cid allegations tid dig