பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பில் மகிந்தவின் கருத்து!

0
649
Mahinda comment release 7 persons

{ Mahinda comment release 7 persons }
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றவர்களை விடுவிப்பது குறித்து இந்திய அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டெல்லிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், அங்கு செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போது இதனைக் கூறியுள்ளார்.

இந்தவிடயத்தை தம்மால் எந்த கருத்தையும் வெளியிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நளினி முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட7 பேரை விடுவிக்கும் அதிகாரம், தமிழக ஆளுனரிடம் இருப்பதாக, இந்திய உயர் நீதிமன்றம் அறிவித்தது.

இதன்பிரகாரம் குறித்த 7 பேரையும் விடுவிப்பதற்கு தமிழக அமைச்சரவை தீர்மானம் மேற்கொண்டு, அந்த தீர்மானத்தை தமிழக ஆளுனரிடம் கையளிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: Mahinda comment release 7 persons

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites