நாயாற்றில் மீண்டும் பதற்றம்; கிளர்ந்தெழுந்த பொதுமக்கள்

0
765

முல்லைத்தீவு நாயாறு செம்மலை பகுதியில் தொல்லியல் திணைக்களத்தின் மூலம் விகாரை அமைப்பதற்கு இன்றைய தினம் முயற்சித்த போது, அந்த முயற்சி பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். (Land acquisition action Mullaitivu)

நாயாற்று பாலத்திற்கு அருகிலுள்ள பகுதியில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணியில் பல நூறு ஆண்டுகளாக பிள்ளையார் ஆலயம் இருந்துள்ளது.

இந்த இடத்தை அடாத்தாகப் பிடித்து குருகந்த ரஜமஹா விகாரை என்னும் விகாரை ஒன்றை அமைத்து, குறித்த இடத்தை சொந்தமாக்குவதற்கு தொல்பொருள் திணைக்களம் ஊடக நிலஅளவைத் திணைக்களத்தால் இந்த அளவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், குறித்த பகுதிகளில் வன ஜீவராசிகள் திணைக்களம் ஊடாக 21 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்களை இயற்கை ஒதுக்கிடங்களாக பிரகடனப்படுத்தி சுவீகரிக்கும் அரசின் முயற்சிக்கும் பொதுமக்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் தொல்லியல் திணைக்களத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை இன்றைய தினமும் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில், அப்பகுதிக்குச் சென்ற பொதுமக்களால் அந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டது.

நிலஅளவை செய்வதற்கு முல்லைத்தீவு உதவி அரசாங்க அதிபரால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தடுத்து நிறுத்துமாறு அறிவிக்கப்பட்ட கடிதத்துடன், குறித்த அதிகாரிகள் வந்ததாகவும் அவ்விடத்திற்கு சென்ற பொதுமக்களின் எதிர்ப்பினை அடுத்து நில அளவைத் திளக்கள அதிகாரிகள் அருகில் இருந்த இராணுவ முகாமிற்குள் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Land acquisition action Mullaitivu