மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலை தண்ணீர் போத்தல் தொழிற்சாலை அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை நிறுத்தக் கோரி இன்று 07.09.2018 அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதிகாலையிலே மட்டக்களப்பின் பல பகுதிகளில் ரயர்கள் எரிக்கப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாவுள்ளது. அத்துடன் பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை. Batticaloa Pullumalai Water Factory Hartal Protest Tamil News
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகபிரிவிற்குட்பட்ட பெரியபுல்லுமலை கிராம சேவகர் பிரிவில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிக்கும் பாரிய அளவிலான தொழிற்சாலை ஒன்றினை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றது.
மேற்படி பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பதுளை வீதியில் உள்ள அதிகமான பகுதிகளில் முழுமையான நீர்ப்பற்றாக்குறை காணப்படுகின்றது. இவ்வாறு நீர்ப்பற்றாக்குறை காணப்படும் பகுதிகளில் நிலக்கீழ் தண்ணீர், குளங்கள், உன்னிச்சை நீர்ப்பாசணத்திட்டம் போன்றவற்றின் மூலம் நீரைப்பெற்று அத் தண்ணீரை போத்தல்களில் அடைத்து விற்பனை செய்யும் தொழிற்சாலையாக இத் திட்டம் அமையவுள்ளது.
இத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் முகமாக மட்டக்களப்பு முழுவதும் இன்றைய தினம் பூரண ஹர்த்தால் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- எதிர்ப்பு பேரணியினால் அரசாங்கம் பதற்றமடைந்துள்ளது; நாமல்
- நல்லாட்சி அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்கவில்லை; பிரதமர்
- கைத்துப்பாக்கியுடன் நபரொருவர் கைது
- இன்று அதிகாலையில் யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்
- ஸ்ரீஜயவர்த்தனபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் ஞானசார தேரர்
- தந்தை மகனை மண்வெட்டியால் தாக்கி கொலை
- முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத கருத்து; கிழக்கு மாகாணத்தில் ஹர்த்தாலுக்கு அழைப்பு
- வெளிநாட்டு நாணயத் தாள்களுடன் பெண்ணொருவர் கைது
- வட்டவளையில் உணவு ஒவ்வாமையினால் 56 மாணவர்கள் வைத்தியசாலையில்