கூட்டு எதிரணி ஆர்ப்பாட்டத்துக்கு விசேட பாதுகாப்பு!

0
447

கூட்டு எதிரணியின் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ள எதிர்வரும் 5 ஆம் திகதிக்கு கொழும்பு நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக விசேட பொலிஸ் படையணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார். Sri Lanka Joint Opposition Party Protest Security Arrangements Tamil News

கொழும்பில் நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பொது மக்களின் நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படும் விதத்திலும், மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதத்திலும் செயற்பாடுகள் ஏதும் இடம்பெறுமாயின் அதற்கு எதிராக தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பூஜித ஜயசுந்தர கூறியுள்ளார்.

மக்களின் பொது வாழ்க்கைக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்களைக் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் பொலிஸ் மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாராளுமன்றம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் இந்த விசேட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், கலகம் அடக்கும் பொலிஸார், போக்குவரத்துப் பொலிஸார் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரதிப் பொலிஸ் மா அதிபர்களை அழைத்து இது தொடர்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை