மஹியங்கனையில் தந்தை, மகளின் சடலங்கள் மீட்பு

0
592
Father, daughter bodies Recovery Mahiyangana

மஹியங்கனை, தம்பகொல்ல பிரதேசத்திலுள்ள வீடொன்றில் உயிரிழந்திருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. (Father, daughter bodies Recovery Mahiyangana)

மஹியங்கனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது.

31 வயதுடைய தந்தை மற்றும் 11 வயதுடைய மகள் ஆகிய இருவரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குடும்ப பிரச்சினை காரணமாக, விசமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Father, daughter bodies Recovery Mahiyangana