நுண்கடன் தொல்லையால் பெண் வேடத்தில் சுற்றிய இளைஞருக்கு நடந்த கொடூரம்!

0
606

முஸ்லிம் பெண்களின் பர்தா ஆடை அணிந்து, பெண் போல மாறுவேடத்தில் சுற்றித் திரிந்த ஆண் ஒருவரை பொலிசார் நேற்று கைது செய்தனர். அவர் பெண் வேடமிட்டதற்கு கூறிய காரணம் பொலிசாரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. Micro Credit Effect Man Wear Muslim Women Bartha Tamil News

வெலிக்கடை சிறைச்சாலைக்கு அண்மித்த பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார். அந்த பகுதியில் ஆண் ஒருவர் பெண்களின் வேடத்தில் திரிவதாக முச்சக்கர வண்டி சாரதியொருவரிடம் இருந்து பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

நேற்று (29) வெலிக்கடை சிறைச்சாலைக்கு அண்மையில் வைத்து, வெலிக்கடை பொலிசாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தியபோது, பெண் வேடமிட்டதை அவர் ஒத்துக் கொண்டார். பின்னர் அவர் அணிந்திருந்த பர்தா கழற்றப்பட்டது.

நிதி நிறுவனங்களில் இருந்து கடன் பெற்றதாகவும், அதை செலுத்த முடியாததால் பெண் வேடமிட்டு தலைமறைவாக திரிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites