பாண் வாங்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த கதி

0
497
Beruwala Boy Abused Suspect Arrest

பேருவளையில் சிறுவனொருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Beruwala Boy Abused Suspect Arrest

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண் வாங்குவதற்காக 9 வயதுடைய சிறுவனை உந்துருளியில் கடைக்கு அழைத்து சென்ற இளைஞர், அவரை கடைக்கு அழைத்து செல்லாமல் பாழடைந்த இடமொன்றுக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

வீடு திரும்பிய பின்னர் குறித்த சிறுவன் பெற்றோரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்ட பேருவளை காவல் துறையினர், நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை