நான்காயிரம் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு : ஆராயிரம் பேருக்கு காணி உறுதிகள் -பிரதமரால் வழங்கி வைப்பு

0
614
Ranil Wickremesinghe delivering appointment letters 4100 graduates

(Ranil Wickremesinghe delivering appointment letters 4100 graduates)

அரச துறை சார்ந்த பணிகளுக்காக 4,100 பட்டதாரிகள் இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரிமாளிகையில் இன்று (20) இடம்பெற்றது.

நல்லாட்சி அரசாங்கத்திற்கு 3 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த நாட்களில் பல அபிவிருத்திச் செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

“மூச்செடுத்த மூன்று வருடங்கள்” என்பது 3 வது நிறைவு ஆண்டின் தொனிப்பொருளாகும்.

2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி சமூக பொருளாதார மற்றும் கலாசார ரீதியில் பல வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

தற்போது அதன் பயன்களை மக்கள் பெற்று வருகின்றனர். பட்டதாரிகளை அரச சேவையில் இணைத்துக் கொள்வதும் இந்த வேலைத் திட்டத்தின் ஒரு நடவடிக்கையாகும்.

இந்த நிலையில் 6,500 பேருக்கு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வு காலி பத்தேகம பொது விளையாட்டு மைதானத்தில் பிரதமர் தலைமையில் நாளை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

(Ranil Wickremesinghe delivering appointment letters 4100 graduates)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites