‘2012ஆம் ஆண்டின் கிறீஸ் பூதத்தின் மறு உருவமே இப்­போது குள்­ள­ம­னி­தர்­கள்’- பகீர் தகவல்

0
1241
kulla manithargal

2012ஆம் ஆண்­டிலேயே கிறீஸ் பூதம் என்று சொல்லி மக்­கள் பல பயங்­க­ரத்­துக்­கூ­டான அனு­வங்­க­ளைச் சுமந்­தார்­கள். பல­வி­த­மான வேத­னை­களை அனு­ப­வித்­தார்­கள். அந்த வேதனை போன்று இப்­போது குள்ள மனி­தர்­கள் பற்­றிய ஒரு அசம்­பா­வி­தம் நடை­
பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது என தென்­னிந்­தி­யத் திருச்­ச­பை­யின் பேரா­யர் இ. கலா­நிதி டேனி­யல் தியா­க­ராஜா தெரி­வித்­துள்­ளார்.(kulla manithargal,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, )

குள்ள மனி­தர்­கள் தொடர்­பி­லான அச்­சம் மக்­க­ளி­டத்­தில் ஏற்­பட்­டுள்ள நிலை­யில், அவர் வழங்­கிய செய்­தி­யி­லேயே குறித்த விடை­யத்­தைத் தெரி­வித்­துள்­ளார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது.

அண்­மை­யில் யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டிலே பல­வி­த­மான வன்­மு­றை­கள் தாண்­ட­வ­மா­டு­வதை நாம் காண்­கின்­றோம். அதிலே வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள், இப்­போது குள்­ள­ம­னி­தர்­கள் என்று சொல்­லப்­ப­டு­கின்ற சில குறி­யீ­டு­கள்.

2012ஆம் ஆண்­டியே கிறீஸ் பூதம் என்று சொல்லி மக்­கள் பல பயங்­க­ரத்­துக்­கூ­டான அனு­வங்­க­ளைச் சுமந்­தார்­கள்.

பல­வ­த­மான வேத­னை­களை அனு­ப­வித்­தார்­கள். அந்த வேதனை போன்று இப்­போது குள்ள மனி­தர்­கள் பற்­றிய ஒரு அசம்­பா­வி­தம் நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. இவர்­கள் யார்? எங்­கி­ருந்து வரு­கி­றார்­கள், எங்கு செல்­கி­றார்­கள்.

இதை ஆராய வேண்­டும். இவர்­க­ளு­டைய பின்­பு­லத்தை ஆராய்­வ­தும், அதைத் தடுத்­துக் கொள்­வ­தும் சமூ­கத்­தி­னு­டைய ஒட்­டு­மொத்­த­மான கடமை, இது தனி­ந­பர் கட­மை­யல்ல.

ஆகை­யால் சமூ­கமே ஒன்று திரண்டு, இவ்­வா­றான வன்­மு­றை­க­ளுக்கு வித்­தி­டு­ப­வர்­களை கண்­டு­பி­டிக்­க­வேண்­டும், அவர்­க­ளைச் சட்­டத்­தின் முன்­னால் கொண்டு வர­வேண்­டும். அது எவ­ரா­யி­னும் சரி தடுக்­கப்­ப­ட­வேண்­டும்.

மக்­கள் யாவ­ரும் இந்த முயற்­சி­யில் ஒன்­று­ப­ட­வேண்­டும். இது என்­னு­டைய பிரச்­சினை அல்ல, நான் பாதிக்­கப்­ப­ட­வில்லை என்று தவிர்த்து விடக்­கூ­டாது. இது சமூ­கத்­தைப் பாதிக்­கும் ஒரு கார­ணி­யாக உள்­ளது என்­றார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags;kulla manithargal,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news,