கொழும்பு, கொம்பனித்தெருவில் பெண் மீது கத்திக்குத்து : கள்ளக்காதலால் விபரீதம்

0
507
knife attack Slave Island

கொழும்பு-02, கொம்பனி வீதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் ​சுத்திகரிப்பு வேலைச்செய்யும் பெண்ணொருவர் கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.(knife attack Slave Island,Sri Lanka 24 Hours Online Breaking News,)

கத்தியால் குத்தியதாகக் கூறப்பம் அப்பெண்ணின் கணவனை​ கைதுசெய்துள்ளதாக கொம்பனிவீதி பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியசாலைக்கு அண்மையில் வைத்தே, இந்தச் சம்பவம் இன்று (14) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில், மதவாச்சியை வசிப்பிடமாகக் கொண்ட 38 வயதான, பெண்ணொருவ​ரே காயங்களுக்கு உள்ளானார். அப்பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனரென, ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது.

அந்தப்பெண், தவறான தொடர்பை ஏற்படுத்தியிருந்தார் என்றடிப்படையிலேயே, அப்பெண்ணின் கணவன், கத்தியால் குத்தியுள்ளதாக விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:knife attack Slave Island,Sri Lanka 24 Hours Online Breaking News, News, Tamil web news, Tamilnews, Today Tamil News,