தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமி வீழ்ந்து பலி

0
1280
seven year old girl kills Lotus pool

மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்டுவரும் தாமரைத் தடாகத்தில் ஏழு வயது சிறுமியொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார். (seven year old girl kills Lotus pool)

மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த அனுரஞ்சித் அனுசிரா என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் வீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியில், தாமரைத் தடாகம் அமைக்கும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறு தடாகம் அமைக்கப்பட்டுவரும் பகுதியில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த சிறுமியே, தடாகத்தில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

தடாகத்தினுள் சிறுமியின் உடல் மிதப்பதைக் கண்ட அயலவர்கள், சிறுமியை உடனடியாக மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

எனினும் சிறுமி உயிரிழந்துவிட்டார் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; seven year old girl kills Lotus pool