பர்தா விவகாரம் : வெடித்தது சர்ச்சை

0
768
Muslim Students parda incident exam time

நாடு முழுவதும் கடந்த (06) திங்கட்கிழமை முதல் க.பொ.த. உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில், முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்து பரீட்சை எழுதுவதற்கு பல பகுதிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. (Muslim Students parda incident exam time)

அத்துடன், முஸ்லிம் மாணவிகளின் முக்காடுகள் பரீட்சை அதிகாரிகளினால் வலுக்கட்டாயமாக கழற்றவும் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பல முறைப்பாடுகள், முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீனுக்கு கிடைத்துள்ள நிலையில், அவர் இதனை உடனடியாக ஐ.தே.க. தவிசாளர் அமைச்சர் கபீர் ஹாஷிமிடம் முறையிட்டுள்ளார்.

இந்த நிலையில் அமைச்சர் கபீர் ஹாஷிம், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் கவனத்திற்கு உடனடியாகக் கொண்டு வந்துள்ளார்.

இதனையடுத்து, உரிய அறிவுரைகளை பரீட்சை அதிகாரிகளுக்கு வழங்குவதாக கல்வி அமைச்சர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இதேவேளை, பரீட்சையின் போது, முஸ்லிம் மாணவிகளின் ஆடை உரிமை மறுப்பு போன்ற விவகாரங்கள் நடைபெற்றால், அவற்றை உடனடியாக 0772612288 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தமது கவனத்திற்குக் கொண்டு வருமாறும் முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம்.அமீன் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Muslim Students parda incident exam time