கருணாநிதியின் திரைப்படத்தில் நடித்து எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது : இரங்கல் தெரிவித்த நடிகை நமீதா

0
341
Dr Karunanidhi funeral Respect Actress Namitha tamil news

திமுக தலைவர் கருணாநிதியின் திரைப்படத்தில் நடித்தது என் பாக்கியம் என நடிகை நமீதா தெரிவித்துள்ளார். (Dr Karunanidhi funeral Respect Actress Namitha tamil news)

திமுக தலைவர் கருணாநிதி சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் திரையுலகினர் நேரிலும், சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகை நமீதா வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “தமிழ்நாட்டின் மிக சிறந்த தலைவரை நாம் இன்று இழந்து விட்டோம். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் கருணாநிதி அளித்த பங்களிப்பு என்றுமே மறக்க இயலாத ஒன்று.

ஒரு நடிகையாக அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததை ஆசிர்வாதமாகவே கருதுகிறேன். அது என்னால் மறக்கவே இயலாத ஒன்று. அவர் தமிழ் மக்களின் இதயங்களில் எப்போதும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் கதை, வசனத்தில் கடந்த 2011ல் வெளிவந்த இளைஞன் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நமீதா என்பது குறிப்பிடத்தக்கது.

tags :- Dr Karunanidhi funeral Respect Actress Namitha tamil news
இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்
வரலட்சுமி, விஷால் திருமணத்தை உறுதிப்படுத்திய ஆர்யா, ஜெயம் ரவி…!
காப்பகத்திலிருந்து இரவில் மாயமாகும் சிறுமிகள்!
அமெரிக்காவில் உல்லாசம் அனுபவித்த ரன்பீர் – தீபிகா வீடியோ!
“லாரன்ஸ்! இதோ எடுத்துக்கோ இந்தக் கவர்ச்சிக் காணொளி உனக்குத்தான்!” மோசமான கவர்ச்சியில் ஸ்ரீரெட்டி.
இந்த டீஷர்ட்டை நீங்க துவைக்காதிங்க பாலாஜி நான் கொடுத்த முத்தம் அழிந்து விடும் : வைஷ்ணவி பாலாஜிக்கு கொடுத்த முத்தம்
படு பயங்கர கவர்ச்சி புகைப்படத்தை இணையத்தில் கசியவிட்ட நாயகி : வைரல் புகைப்படம்
மனைவி இன்னொருவருடன் உல்லாசமாக இருந்ததை கணவன் நேரில் கண்டதால் வெட்கத்தில் தற்கொலை செய்து கொண்ட மனைவி

எமது ஏனைய தளங்கள்