புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவி பலி

0
864
School student killed train collision

அம்பலாங்கொடை பகுதியில் புகையிரதத்தில் மோதி பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். (School student killed train collision)

தனியார் வகுப்பொன்றில் கல்வி கற்றுவந்த இந்த மாணவி, உணவு இடைவேளைக்காக புகையிரதப் பாதையூடாக நடந்து சென்ற போது, இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் அம்பலாங்கொடை தொபன்வில பகுதியை சேர்ந்த 18 வயதுடையவர் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அளுத்கமையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதுண்ட மாணவி படுகாயங்களுக்குள்ளான நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் அம்லாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; School student killed train collision