திருமணமாகி 35 நாளில் தன் மகள் குழந்தை பெற்றுக் கொண்டதால், அவமானம் அடைந்த தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது. தருமத்துப்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்த பெரியமுத்து என்னும் இளைஞர், சென்னை கோயம்பேட்டில் பூக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், ரெட்டியார்சத்திரம் பகுதியை சேர்ந்த 21 வயது பெண்ணுக்கும் போன மாதம் 1-ந்தேதி திருமணம் நடந்தது. Girl Gives Birth Tamil News
திருமணமான 3 நாளிலேயே பெரியமுத்து கோயம்பேடு வேலைக்கு சென்றுவிட்டார். புதுமனைவியை பார்ப்பதற்காக மீண்டும் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தார். அப்போது மனைவி வயிறு வலிக்கிறது என்று கூறியுள்ளார். அதனால் பதறியடித்து கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மனைவியை அழைத்து போனார் பெரியமுத்து. டாக்டர்கள் செக்கப் செய்தபின்னர்தான் தெரிந்தது அந்த பெண் கர்ப்பமாக இருக்கிறார் என்று. அதுவும் நிறைமாதம். உடனடியாக பிரசவ வார்டுக்கு அந்த பெண் மாற்றப்பட்டு, கொஞ்ச நேரத்தில் ஒரு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது.
மனைவி வயிறு வலி-ன்னு சொன்னாளே, அவளுக்கு என்ன ஆச்சோ, ஏது ஆச்சோன்னு மருத்துவமனை வாயிலில் தவித்து கொண்டுநின்றிருந்தார் பெரியமுத்து. அங்கு வந்த டாக்டர், “உங்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கு” என்றார்கள். 35 நாளில் குழந்தையா என்று தூக்கி வாரிப்போட்டது பெரியமுத்துவுக்கு. இதுகுறித்து பெண்ணின் வீட்டாருக்கு தகவல் அளித்தார் பெரியமுத்து. இவள் எனக்கு வேண்டாம் அவர்கள் அதற்குமேல் உறைந்துபோய் நின்றனர்.
கல்யாணத்துக்கு முன்பே வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டு இந்த குழந்தை பிறந்துள்ளதால், தனக்கு இவள் வேண்டாம் என்று பெரியமுத்து அந்த பெண்ணின் தகப்பனாரான முனியப்பனிடம் சொன்னார். ஆனால் மாப்பிள்ளை சொன்னதுகூட முனியப்பன் காதில் ஏறவில்லை. தூக்கில் தொங்கினார் பெத்த பெண் இப்படி ஒரு காரியம் செய்துவிட்டாளே என்று அவமானத்தில் புழுங்கி குலுங்கி குலுங்கி அழுதார். ஒருகட்டத்தில் அவரால் இதை ஜீரணிக்கவே முடியாமல் தூக்கு போட்டு தற்கொலையே செய்துகொண்டார். இது குறித்து ரெட்டியார்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.