சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் கர்பமுற்றிருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார். one men arrest tangalle fifteen years old child raped thirty four years
இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்று தங்காளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் 05 மாத கர்ப்பிணி என்பது தெரியவந்துள்ளது.
பெலியத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த முதலாம் திகதி ஒருவகை மருந்தை அருந்தியதால் நோயுற்ற குறித்த சிறுமி பெலியத்தை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிகச சிகிச்சைகளுக்காக தங்காளை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அந்த சிறுமி கர்ப்பிணி என்பது தங்காளை ஆதார வைத்தியசாலையில் வைத்து தெரிய வந்துள்ளது.
இதனைதயடுத்து அந்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து பெலியத்தை, கரம்பகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவர் பெலியத்தை பொலிஸ் அதிகாரிகளால் நேற்று சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பெலியத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
one men arrest tangalle fifteen years old child raped thirty four years
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- நாட்டின் ஒற்றுமையை குழப்புவதற்கு எதிர்கட்சிகள் முயற்சி; இராதாகிருஸ்ணன்
- பாதை எது? குழி எது? கர்ப்பிணித் தாய்மார்கள் அனுபவிக்கும் அவலம்
- புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது
- போதைப் பொருள் கடத்தல்காரரான ‘பொலிஸ்’ சரத் பொன்சேகாவின் நண்பரா?
- அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு
- காட்டுப்பன்றி இறைச்சியை உட்கொண்ட 02 வயது குழந்தை பலி
- கத்தி முனையில் கொள்ளை; பெண்ணொருவர் உள்ளடங்கிய கும்பல் கைது
- விரியன் பாம்பை விழுங்கிய நாக பாம்பு; கிதுல்கல பகுதியில் அதிசயம்
- பெண்களின் தொடையை வீடியோ எடுத்த நபரைத் தாக்கிய பொதுமக்கள்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com