பிரான்ஸில் திருடனை பிடிக்க சென்ற பொலிஸார் பறி கொடுத்தவரை கைது செய்த விநோத சம்பவம்!

0
346
fierce incident place France arresting thief

பிரான்ஸ், Yvelinesஇல் ஒரு விசித்திர சம்பவம் இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர், தன்னுடைய வீட்டில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக காவல்துறையினரிற்கு புகார் கொடுத்துள்ளார். அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், கொள்ளையனை விட்டுவிட்டு வீட்டின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.fierce incident place France arresting thief

வியாழக்கிழமை இரவு 11 மணி அளவில், Epone ( Yvelines) இலுள்ள வீடு ஒன்றில் கொள்ளை போயுள்ளதாக நபர் ஒருவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த வீட்டுக்கு வந்த BAC அதிகாரிகள் வீட்டினை நன்றாக சோதனையிட்டுள்ளனர். களவு போன பொருட்கள் குறித்த விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினருக்கு, அதிர்ச்சி அளிக்கும் விதமாக, குறித்த நபரின் வீட்டின் மாடியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்தோட்டத்தில் கஞ்சா செடிகள் முளைத்து நிற்பதை கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன், கஞ்சா செடிகள் நல்ல ஆரோக்கியமாக வளர தேவையான அனைத்து மருந்துகளும், கருவிகளும் அங்கு இருப்பதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து 52 வயதான குறித்த நபர் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் ‘தனது சொந்த சேவைக்காக’ இந்த தோட்டத்தினை அவர் வளர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், காவல்துறையினர் கைதுசெய்வதற்காகச் சென்ற கொள்ளையன் தப்பிச்சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

tags :- fierce incident place France arresting thief

இன்னும்  பல சுவாரஸ்யமான செய்திகள்

எமது ஏனைய தளங்கள்