புறக்கோட்டையில் 100 க்கும் மேற்பட்ட விலைமாதுக்கள் கைது

0
1754
Morethan 100 prostitutes arrested Pettah colombo

இந்த வருடத்தின் கடந்த நான்கு மாதங்களில் புறக்கோட்டையில் 100 கைப்பை திருடர்களும் (பிக் பொகெட் காரர்கள்), 100 விலைமாதுக்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக புறக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். (Morethan 100 prostitutes arrested Pettah colombo)

இந்த கைப் பை திருடர்களில் பெண்களும் உள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களில் 20 பிரதான பிக்பொகெட்காரர்கள் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர்களில் அநேகமானோர் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் வெளிமாவட்டங்களில் வசிப்பவர்கள் எனவும் அநேமானோர் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள், பொருட்களை கொள்வனவு செய்வதற்கு புறக்கோட்டையில் மக்கள் அநேகமாக நடமாடும் இடங்களிலும், பயணிகள் பஸ் வண்டிகளில் முட்டிமோதி ஏறும் போது கைப் பைகளை திருட்யுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட விலை மாதுக்களில் அநேகமானோர் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்கள் எனவும் இவர்களின் சேவையை தேடி வருவோரின் கைப் பைகளை திருடியுள்ளார்கள் எனவும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நலின் ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

கைப் பை திருடும் சந்தேக நபர்களின் தகவல் அறிந்திருந்தால் 1002320470 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களிடம் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Morethan 100 prostitutes arrested Pettah colombo