நாட்டை இராணுவமயமாக்க மைத்திரி முயற்சி – எச்சரிக்கை விடுக்கிறார் மகிந்த!

0
499
Maithripala Sirisena Trying Implement Militray Control Mahinda Warning

நாட்டில் சட்டம் ஒழுங்கை பேணுவதற்கு அரசாங்கத்தினால் முடியாமல் போயுள்ளது. இதனால், நாட்டை இராணுவமயப்படுத்த முயற்சி செய்கிறது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார். Maithripala Sirisena Trying Implement Militray Control Mahinda Warning Tamil News

மேலும் நாட்டை இராணுவ மயப்படுத்த முனைவது ஆபத்தானது எனவும் மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை ஒன்றையும் விடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

“150 ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பது போல, சிவில் விவகாரங்களில் விசாரணைகளை முன்னெடுக்க காவல்துறையினர் அனுமதிக்கப்பட வேண்டும்.

இந்தப் பணி படையினருக்கு முதல்முறையாக வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டை இராணுவமயப்படுத்தும் முயற்சி.

போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலைகள் தொடர்பாக, விசாரணைகளை முன்னெடுக்க படையினர் அனுமதிக்கப்படுவது ஆபத்தானது.

தற்போதைய அரசாங்கம் படைகளைப் பலப்படுத்துவதை விட்டு விட்டு அவர்களுக்கு காவல்துறை அதிகாரங்களைக் கொடுக்கிறது. இதனை அனுமதிக்க முடியாது.” என கூறியுள்ளார்.

அண்மைய காலங்களில் பெருகி வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த இராணுவத்துக்கு அதிகாரங்களை வழங்க மைத்திரி அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளை சுட்டிக்காட்டிய மகிந்த இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites