பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாவின் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது இன்றைய புரோமோ மூலம் தெரிகிறது.Biggboss 2 tamil august promo video released
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் இரண்டாவது சீசன் நிகழ்ச்சி சமீபத்தில் நன்கு சூடுபிடிக்கத் தொடங்கியது.
வீட்டிற்கு வந்த 16 போட்டியாளர்களில் நான்கு பேர் வெளியேற்றப்பட்டு இப்போது 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள். பாத்ரூமை பயன்படுத்துவதற்கும், டீ குடிப்பதற்குமா டாஸ்க் வைப்பீர்கள் என்று ஒருபக்கம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமீபத்தில் சர்வாதிகார ஆட்சி என்ற லக்சூரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது. ”தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்” மற்றும் தற்போது ரிலீஸாக உள்ள ”மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன” போன்ற திரைப்படங்களில் நடித்துள்ள ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டின் ராணியாக நியமிக்கப்பட்டார்.
ராணி என்றதுமே அவரின் ஆட்டம் ஆரம்பமானது, பிக்பாஸ் வீட்டில் தனக்கு பிடிக்காதவர்களை கடுமையாக கொடுமைப்படுத்தினார். ரித்விகாவை சீண்டியது, பாலாஜி மீது குப்பை கொட்டியது என ஐஸ்வர்யாவின் ஆட்டம் எல்லை மீறியது.
இந் நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான புரோமோவில், ஐஸ்வர்யாவின் அராஜகங்கள் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதாவது, சர்வாதிகாரம் செய்து வந்த ஐஸ்வர்யாவை சென்றாயன் மற்றும் பொன்னம்பலம் இருவரும் நீச்சல் தடாகத்தில் தள்ளும் காட்சி இன்றைய புரமோ வீடியோவில் வெளியாகியுள்ளது.
அத்துடன், வைஷ்ணவி சீக்ரட் ரூமிற்குள் இருந்து வெளியே வருகிறார். எல்லோரும் ஜாலியாக இருக்கிறார்கள்.
”பிக் பாஸ்” போட்டியாளர்களில் யார் மிகவும் நேர்மையானவர்கள் என்பதை வரிசைப்படுத்தி நிற்க வைக்க வேண்டும் என படித்துவிட்டு டேனியை தனியே நிற்கச் சொல்கிறார்.
டேனி நேர்மையானவர்கள் வரிசையில் முதலில் உள்ளாரா அல்லது கடைசியில் உள்ளாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Video Source : Vijay Television
<<MOST RELATED CINEMA NEWS>>
* போலீஸார் என்னை நிர்வாணமாக்கி துன்புறுத்தினர் : மோசடி வழக்கில் கைதான நடிகை பகீர் தகவல்..!
* அகங்காரத்தினால் ஆட்டம் போட்ட ஐஸ்வர்யாவின் கன்னத்தில் அறைந்த சென்றாயன் : பிக்பாஸ் அதிர்ச்சி வீடியோ..!
* ஜெனிபர் லோபஸ் ஆடையை பார்த்து வாயைப் பிளந்த ரசிகர்கள் பட்டாளம்..!
* இவ்வாரம் ரிலீஸாகும் 11 படங்கள் : ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பு..!
* பைத்தியம் பிடிச்ச லூசு, கிறுக்கி, மெண்டல், சைகோ.. : ஐஸ்வர்யாவை திட்டிய நடிகர் சதீஸ்..!
* லாரன்ஸ் விடுத்த சவாலுக்கு எதிர் சவால் விடுக்கும் ஸ்ரீரெட்டி வீடியோ..!
* நிர்வாண போட்டோ ஷூட் எடுத்து அனுப்பும் நடிகை : காரணம் இது தானாம்..!
* ஐஸ்வர்யாராய் – அபிஷேக் மோதல் : ஆராத்யாவை அபிஷேக்குடன் நெருங்கவிடாத ஐஸ்..!
* ஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் படம் தேர்வு : பட்டிதொட்டி எங்கும் பல சாதனைகள்..!