மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் பணிபுரியும் பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட், திரேசியா, மோரா, கியூ, சென்ஜோன்டிலரி, கிலானி ஆகிய தோட்டப் பகுதிகளை சேர்ந்த தோட்ட உத்தியோகஸ்தர்கள் இன்று புதன்கிழமை காலை ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர். (Plantation Officials Demonstrated Bogawanthalawa)
சுமார் 7 மாத காலமாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாது இடை நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே, இந்த ஆர்ப்பாட்டத்தை பொகவந்தலாவ டின்சின் நகரில் முன்னெடுத்தனர்.
சுமார் 300 க்கும் மேற்பட்ட உத்தியோகஸ்தர்கள் பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதனால் சுமார் ஒரு மணித்தியாலயம் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.
மடுல்சீமை பெருந்தோட்ட கம்பனியின் கீழ் பணிபுரியும் தங்களுக்கு எந்தவித அறிவிப்புகளும் இன்றி எங்களுக்கு வழங்கபட வேண்டிய மேலதிக கொடுப்பனவுகளை தோட்ட நிர்வாகம் வழங்குவதில்லை.
ஏன் வழங்கவில்லை என தோட்ட நிர்வாகத்திடம் கேட்டால், நிறுவனத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. ஆனால் எங்களை தோட்ட நிர்வாகமும் கம்பனியும் சேர்ந்து கொண்டு எங்களை பழிவாங்குவதாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.
எங்களுக்கு மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரவித்தே நாங்கள் தொழிலுக்கு செல்லாது இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக ஆர்ப்பாட்டகாரர்கள் மேலும் தெரிவித்தனர்.
எனவே எங்களின் மேலதிக கொடுப்பனவை வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் ஆர்ப்பாட்டகாரர்கள் கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு சமூகமளித்த ஹட்டன் பொலிஸ் நிலைய உதவி அத்தியட்சகர் தஸாநாயக்க தலைமையில் ஆர்ப்பாட்டகாரர்களோடு கலந்துரையாடப்பட்ட பின்னர் ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் இருந்து கலகத் தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு நற்செய்தி; வட்டி இல்லாத கடன் வசதிகள்
- கிளிநொச்சியில் கொய்யாமரத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றினால் சிறுவன் பலி
- 60 வயது தந்தையை 25 வயதுடைய பெண்ணுடன் சேர்த்து வைத்த பிள்ளைகள்
- கள்ளக் காதலியை வெட்டிக் கொலை செய்த நபர் வசமாக மாட்டினார்
- மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி; இரண்டாம் தவணை நிறைவு
- கேப்பாப்புலவு இராணுவ முகாம் முன்பாகவிருந்த பெட்டிக்கடை அகற்றல்
- பாலத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
Tags; Plantation Officials Demonstrated Bogawanthalawa