பரிஸில், வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கடை ஒன்றின் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. horrifying woman middle Paris tamil news
கடந்த ஜூலை 24 ஆம் திகதி நண்பகல் வேளையில், பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பின் தொடர்ந்த நபர் ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.
அப்போது வீதியின் முனையில் இருந்த தேநீர் கடை ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமரா ஒன்றில் இந்த காட்சிகள் பதிவாகியுள்ளன. தொலைக்காட்சி ஒன்றுக்கு தாக்கப்பட்ட பெண்ணான Marie அளித்த பேட்டியில், ‘நடு வீதியில் வைத்து பலரின் முன்னிலையில் முகத்தில் பலமாக தாக்கினார்!’ என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறித்த ஆண் நீண்ட நேரமாக விசில் அடித்தும், தகாத வார்த்தைகளை பிரயோகித்தும் பின்னால் தொடர்ந்து வந்தார் எனவும், அதன் பின்னர் தாம் ‘வாயை மூடு’ என கத்தியதாகவும், அதன் பின்னரே அவர் முகத்தில் பலமாக தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார்.
பேட்டி எடுத்த தொலைக்காட்சி நிறுவனம் குறித்த சம்பவத்தின் காணொளியை அதன் பின்னர் கைப்பற்றி வெளியிட்டது. தற்போது இணையமெங்கும் அந்த காணொளி வேகமாக பரவி வருகின்றது.
மேலும், பிரான்ஸில் இரண்டில் ஒரு பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
tags :- horrifying woman middle Paris
இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள்
- பிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
- பிரான்ஸில், குத்தாட்டம் போட்ட பிரபல பொப் பாடகி சிறையில்!
- டொரோண்டோ துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள் அடையாளம் காணப்பட்டார்!
- நான் தான் இப்போ கேப்டன் நான் சொல்றத கேளுங்க : பாலாஜியிடம் கெத்து காட்டும் ஐஸ்