விசா அனுமதிப்பத்திரமின்றி ஐக்கிய அரபு இராச்சியத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு அங்கிருந்து வெளியேற பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. UAE amnesty Visa Over stay
எதிர்வரும் ஆகஸ்ட் 1ஆம் திகதி தொடக்கம் குறித்த பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி , இவ்வாறு விசா முடிந்தும் அங்கு தங்கியிருப்பவர்களிடம் தண்டப்பணம் அறவிடாது அவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருப்பதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.