மகிந்த – சம்பந்தன் சந்திப்பில் நடந்தது இது மட்டும் தானாம்!

0
555
anantha sangari criticize sampanthan campfire vijayakala maheshwaran

கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் 91 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் நேரடியாக கலந்துரையாடிய விடயம் ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றமை அறிந்ததே. TNA R Sampanthan Mahinda Rajapaksa Meeting Secret Matter Tamil News

இந்தச் சந்திப்புக் குறித்து திருகோணமலையில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த இரா.சம்பந்தன், இந்த சந்திப்பின் போது புதிய அரசியலமைப்பு உருவாக்கப் பணிகளுக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தாம் ஆதரவு கோரியதாக தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டியதன் அவசியம் பற்றிக் கலந்துரையாடினோம்.

தாம் ஆட்சியில் இருந்த போது, தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான திட்டம் தம்மிடம் இருந்த்து என்றும் ஆனால் அதனைப் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்த முடியாமல் போய் விட்டதாகவும் மகிந்த ராஜபக்ச கூறினார்.

கடந்த காலத்தை மறந்து விட்டு, புதிய அரசியலமைப்பு மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அதரவு அளிக்க வேண்டும் என்று அவரிடம் கேட்டுக் கொண்டேன்.

தமிழ் மக்களுக்காக மாத்திரமன்றி முழு நாட்டுக்காகவும், இந்த விடயத்தில் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அது அவரது கடமை என்றும் கூறினேன். தாம் அதுபற்றி சிந்திப்பதாக அவர் கூறினார், மறுப்புத் தெரிவிக்கவில்லை.

எம்மைப் பொறுத்தவரையில், எவரது பகைமையையும் சம்பாதிக்க விரும்பவில்லை. அனைவரது ஒத்துழைப்பையும் பெற விரும்புகிறோம் என கூறியுள்ளார்.

எனினும் இந்த சந்திப்பில் மகிந்த தரப்புக்கு தமிழ் கூட்டமைப்பு ஆதரவு நல்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக ஊகங்கள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites