கூட்டமைப்பினர் அலோசியஸிடம் பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளனர் : வெடித்தது புதிய சர்ச்சை

0
844
TNA got money arjuna aloysius

பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸிடமிருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், பெருந்தொகை பணத்தை பெற்றுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி சற்றுமுன்னர் புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.(TNA got money arjuna aloysius,Tamilnews)

வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வடக்கு கிழக்கு மக்களை ஏமாற்றி வருகின்றார்கள். புதிய அரசியலமைப்பு ஒருபோதும் வராது. கூட்டமைப்பினருக்கு இந்த விடயம் ஏற்கனவே தெரியும்.

எனினும் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு பிறகும் என்னால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது.

ஒரு காலத்தில் புலிகள் தான் மக்களை கூடுதலாக சுட்டுகொலை செய்தார்கள் என சுமந்திரன் கூறிவந்தார்.
ஆனால் தற்போது எமது மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுத் தருவதாக நடித்துகொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் அர்ஜூன் அலோசியஸிடமிருந்து பெருந்தொகை பணத்தை பணத்தை பெற்றுள்ளனர். இதனை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்த வேண்டும்.

நான் வாயை மூடிக்கொண்டிருந்தமையால் எனது கடமையை மக்களுக்கு செய்ய தவறி விட்டேனோ என எண்ணத் தோன்றுகின்றது.

சம்பந்தனுக்கு ஒன்றுமே முடியாது. அவர் ஒரு செல்லாக் காசு எனவும் தெரிவித்தார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:TNA got money arjuna aloysius,TNA got money arjuna aloysius,TNA got money arjuna aloysius,