அந்தமானில் இலங்கை தமிழர்களுக்கு நிலம் ஒதுக்க வலியுறுத்தல்

0
601
SriLankaTamils Andaman

அந்தமானில் உள்ள 48 இலங்கை தமிழர்களுக்கு 1.5 ஹெக்டேர் நிலம் ஒதுக்க வேண்டும் என அந்தமான் – நிக்கோபார் தீவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே வலியுறுத்தியுள்ளார்.(SriLankaTamils Andaman, Tamilnews)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பண்டாரநாயகே மற்றும் இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோருக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கையில் இருந்து பல தமிழர்கள் குடும்பங்கள் அகதிகளாக வந்து அந்தமான் – நிக்கோபர் தீவில் உள்ள ஷோயல் வளைகுடா பகுதியில் குடியேறின. இவர்களுக்கான வாழ்வாதாரமாக இரண்டு ஹெக்டேர் நிலம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 1976-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து குடிபெயர்ந்து அந்தமானில் உள்ள கட்சல் தீவில் தஞ்சம் அடைந்த 48 தமிழர்கள் குடும்பத்துக்கு வெறும் அரை ஹெக்டேர் நிலம் மட்டுமே வழங்கப்பட்டது.

இவர்களுக்கு ஒன்றரை ஹெக்டேர் நிலம் ஒதுக்கீடு செய்து அளிக்கப்படும் என முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், அந்த குடும்பங்கள் இங்கு வந்து குடியேறி 42 ஆகியும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

இந்த விவாகரத்தை தற்போது கையில் எடுத்துள்ள அந்தமான் – நிக்கோபார் தீவின் ஒரே பாராளுமன்ற உறுப்பினரான பிஷ்னு பாடா ரே, தற்போது காம்ரோட்டா தீவில் வாழும் இந்த 48 குடும்பங்களுக்கு ஒன்றரை ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:SriLankaTamils Andaman,SriLankaTamils Andaman,SriLankaTamils Andaman