திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அம்மன் கோவிலில் பிரசாதம் உண்ட 150 பேருக்கு வாந்தி பேதி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த குவளைக்கால் என்ற இடத்தில் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு நேற்று ஆடி 2-வது வெள்ளிக்கிழமையையொட்டி இரவு சாமி ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஊர்வலம் முடிந்து கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பொங்கல், புளிசாதம், தயிர் சாதம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை 200-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கி உட்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் பிரசாதம் உண்ட 150 பேருக்கு இன்று காலை வாந்தி-பேதி ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றனர்.
இதுபற்றி தகவல் தெரியவந்ததும் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் உத்தரவின் பேரில் பூந்தோட்டம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சேர்ந்த 5 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அவர்கள் கோவில் அருகில் முகாம் அமைத்து பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களுக்கு ஊசி போட்டு மருந்துகள் கொடுத்தனர்.
வாந்தி-பேதிக்கு காரணம் என்ன? என்பது குறித்து அதிகாரிகள் கூறும்போது, உணவு சமையலுக்கு பயன்படுத்திய புளி நீண்ட நாளைக்கு முன்பு உள்ளது என்பதால் அதனால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அல்லது நேற்று சந்திர கிரகணம் என்பதால் இரவு 11 மணிக்குமேல் உணவு சாப்பிட்டதால் ஜீரணம் ஆகாமல் வாந்தி-பேதி ஏற்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்தனர். government admitted hospital vomiting due 150 people temple
தற்போது வாந்தி- பேதியால் பாதிக்கப்பட்டவர்கள் சற்று குணமடைந்துள்ளனர். இதனால் அங்கு தற்போது அமைதியான சூழ்நிலை திரும்பி வருகிறது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- தூக்கு தண்டனை கைதிகளுக்கு விருந்தளிக்கப் போகும் ஜனாதிபதி..!
- பாலியல் சர்ச்சை : ‘தான் விரும்பியே தனுஷ்க குணதிலகவுடன் ஹோட்டலில் தங்கினேன்” : நோர்வே பெண் வாக்குமூலம்
- பாலியல் விவகாரம்: ‘பிளே போய்’ வாழ்க்கை வாழும் தனுஷ்கவின் நண்பன்
- ஹோமாகமவில் அச்ச நிலை : நடு இரவில் நிர்வாணமாக சுற்றும் கிரீஸ் பேய்
- அனந்தி சசிதரன் – ரிசாட் பதீயுதீனுடன் நெருங்கிய உறவு தொடர்பில் சர்ச்சை!
- இன்று அதிகாலை நடந்த கோர விபத்து : 19 பயணிகள் படுகாயம்
- கள்ளக்காதலியுடன் உல்லாசம்; 07 வயது மகளுக்கு போதைமருந்து கொடுத்த தந்தை
- மொனராகலையில் கொடூரம் : மாணவியை மாறி மாறி துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர்கள்
- யாழில் குடும்பத் தலைவன் செய்த செயல் : வயிறு பெருத்து காணப்பட்டதால் நடந்த விபரீதம்