இன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்

0
801
Today Horoscope 26-07-2018

 

இன்று! (Today horoscope tamil 26-07-2018)

இன்று!
விளம்பி வருடம், ஆடி மாதம் 11ம் தேதி, துல்ஹாதா 13ம் தேதி,
27.7.18 வெள்ளிக்கிழமை, வளர்பிறை, பவுர்ணமி திதி இரவு 2:23 வரை;
அதன் பின் பிரதமை திதி, உத்திராடம் நட்சத்திரம் இரவு 1:43 வரை;
அதன்பின் திருவோணம் நட்சத்திரம், சித்த, மரணயோகம்.

* நல்ல நேரம் : காலை 9:00–10:30 மணி
* ராகு காலம் : காலை 10:30–12:00 மணி
* எமகண்டம் : மதியம் 3:00–4:30 மணி
* குளிகை : காலை 7:30–9:00 மணி
* சூலம் : மேற்கு

பரிகாரம் : வெல்லம்
சந்திராஷ்டமம் : மிருகசீரிடம், திருவாதிரை
பொது : ஆடித்தபசு, பவுர்ணமி, மலைக்கோவில் வழிபாடு.
வாஸ்து நாள். பூஜை நேரம் காலை 7:44 – 8:20 மணி)

மேஷம்:

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபார விருத்தியுண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

 

ரிஷபம்:

குடும்பச்சுமை கூடும் நாள். வைராக்கியத்தோடு செயல்பட்டு வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உங்கள் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும். உறவினர் பகை உருவாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

மிதுனம்:

நம்பிக்கைகள் நடைபெறும் நாள். நாணயப் பாதிப்புகளிலிருந்து விடுபடுவீர்கள். புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபார விருத்தியுண்டு. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர்.

கடகம்:

நண்பரிடம் கேட்ட உதவி கிடைக்கும். செயல்களில் பொறுப்புணர்வுடன் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் புதிய வளர்ச்சி உருவாகும். பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். உறவினர் மூலம் சுபசெய்தி வந்து சேரும்.

சிம்மம்:

கடந்த கால விஷயங்களை நண்பரிடம் பேசி மகிழ்வீர்கள். தொழில்,வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத் தேவை தாராள பணச்செலவில் நிறைவேறும்.

கன்னி:

அனைவரிடமும் அன்புடன் பழகுவீர்கள். பேச்சிலும், செயலிலும் நேர்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரத்தில் அபரிமிதமான வளர்ச்சி உண்டாகும். தாராள பணவரவு கிடைக்கும். சுப நிகழ்ச்சி நடத்த திட்டமிடுவீர்கள்.

துலாம்:

நீண்ட நாள் முயற்சி நிறைவேற வாய்ப்பு உண்டாகும். நண்பர்கள் தேவையான உதவியை மனமுவந்து வழங்குவர். தொழில் வியாபாரத்தில்; நல்ல முன்னேற்றம் ஏற்படும். வருமானம் திருப்தியளிக்கும். வெளியூர் பயணம் பயனறிந்து மேற்கொள்வீர்கள்.

விருச்சிகம்:

எதிர்வரும் சிரமங்களை தாமதமின்றி சரி செய்யவும். நல்லவர்களின் ஆலோசனை நன்மைக்கு வழிவகுக்கும். தொழில் வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். வருமானம் சுமாராக இருக்கும். வாகன பாதுகாப்பில் உரிய கவனம் செலுத்தவும்.

தனுசு:

எவரிடமும் தற்பெருமை எண்ணத்துடன் பேச வேண்டாம். தொழில், வியாபாரத்தில் உருவாகிற இடையூறை தாமதமின்றி சரிசெய்வது நல்லது. அளவான பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் ஒற்றுமை காப்பது நல்லது. ஆரோக்கியம் பலம் பெறும்.

மகரம்:

வருமானப் பற்றாக்குறை அகலும் நாள். வழக்குகளில் திசை திருப்பம் ஏற்படும். உள்ளம் மகிழும் செய்தியொன்றை உடன்பிறப்புகள் வழியில் கேட்கலாம். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். கல்யாண முயற்சி கைகூடும்.

கும்பம்:

அவமதித்தவர் அன்பு பாராட்டுகிற நிலை உருவாகும். தொழில், வியாபார வளர்ச்சியால் புதிய சாதனை படைப்பீர்கள். ஆதாயம் பன்மடங்கு உயரும். மனைவியின் விருப்பம் அறிந்து நிறைவேற்றுவீர்கள். அரசு வகையில் நன்மை உண்டாகும்

மீனம்:

வளர்ச்சிக்கான திட்டங்களை தீட்டுவீர்கள். நண்பரின் ஆலோசனையால் நன்மை உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை செழிக்கும். வெகுநாள் வாங்க நினைத்த பொருள் வந்து சேரும். பணியாளர்களுக்கு சிறந்த பணிக்காக பாராட்டு, வெகுமதி கிடைக்கும்.

மேலும் பல சோதிட தகவல்கள்  

எமது ஏனைய தளங்கள்